மழை  (கோப்புப்படம்)
தமிழ்நாடு

நவ.12-ல் 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் புதன்கிழமை (நவ. 12) கோவை, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வரும் புதன்கிழமை (நவ. 12) கோவை, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வட தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (நவ. 10) முதல் நவ. 15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை: புதன்கிழமை (நவ. 12) தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, தென்காசி மாவட்டங்களிலும், வியாழக்கிழமை (நவ. 13) கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 10) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரி, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.

மேலும், மதுரை விமான நிலையம், திருமங்கலம் (மதுரை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) - தலா 30 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: 3 பேர் பலி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT