கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவினர் தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் பரிதா நவாப்(திமுக) மீதான நம்பிக்கை எல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு, நகர்மன்ற கூட்டரங்கில் ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள், அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்கள், சுயேச்சைகள் நான்கு உறுப்பினர்கள் என மொத்தம் 27 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் மீதான நம்பிக்கை இல்லா வாக்கு எடுப்பு நடத்த மொத்தம் உள்ள 33 வார்டு உறுப்பினர்களில் 27 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த வாக்கெடுப்ப்பில் பங்கேற்க அதிமுக உறுப்பினர் உள்பட 27 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக உறுப்பினர் நாக ஜோதி (ஒன்பதாவது வார்டு) கடத்தியதாகக் கூறி அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே அசோக்குமார் எம்எல்ஏ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தில் நுழைய முற்பட்டனர்.
கிருஷ்ணகிரி டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாரைக் கண்டித்து அதிமுகவினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.