ரயில் கோப்புப்படம்
தமிழ்நாடு

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

2026 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்...

இணையதளச் செய்திப் பிரிவு

2026 பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியிருக்கின்றனர்.

அந்தவகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

2026 ஆம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி(தை 1, வியாழக்கிழமை) வருகிறது.

இந்நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று(நவ. 10, திங்கள்) தொடங்கியுள்ளது.

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நெல்லை, பொதிகை, சிலம்பு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்களில் டிக்கெட் முழுவதும் தீர்ந்துவிட்டது. பல ரயில்களில் டிக்கெட் காத்திருப்பு பட்டிய்லில் உள்ளன.

தொடர்ந்து ஜன. 10 ஆம் தேதி, சனிக்கிழமை புறப்படுவதற்கு (நாளை)நவ. 11 ஆம் தேதியும்

ஜன. 11, ஞாயிறு புறப்படுவதற்கு நவ. 12 ஆம் தேதியும்

ஜன. 12, திங்கள் புறப்படுவதற்கு நவ. 13 ஆம் தேதியும்

ஜன. 13, செவ்வாய் புறப்படுவதற்கு நவ. 14 ஆம் தேதியும்

ஜன. 14, புதன் (பொங்கலுக்கு முந்தைய நாள்) புறப்படுவதற்கு நவ. 15 ஆம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.

அன்றைய நாளில் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகை முடிந்து ஜன. 18(ஞாயிறு) திரும்புவதற்கு நவ. 19(புதன்) காலை முன்பதிவு தொடங்கும்.

Pongal train ticket bookings started

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய முயற்சியில் வெற்றி வாகை சூடும் கடக ராசிக்காரர்கள்!

கடவுள் ஒரு விதி எழுதினால், மக்கள் வேறு எழுதுகின்றனர்: பிக் பாஸ் பிரவீன்

லைட்டிங்... ஐஸ்வர்யா சர்மா!

முதல் டெஸ்ட்டுக்கு தயாராகும் இந்தியா, தென்னாப்பிரிக்கா!

டிடிஎஃப் வாசனின் ஐபிஎல் டிரைலர்!

SCROLL FOR NEXT