தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை!
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை.
இந்தநிலையில் ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லைத் தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து கைதான 14 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள விசாரணை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகவரி மாறிய வாக்காளர்கள் கவனத்துக்கு... எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி!
முன்னதாக நவம்பர் 3-ஆம் தேதி 35 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The Sri Lankan Navy has arrested 14 fishermen from the Nagai district for allegedly fishing across the border.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.