திருச்சி: திருச்சியில் காவலர் குடியிருப்பு உள்ளே நுழைந்து இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் உள்ள நிலையில் அங்குள்ள காவலர் குடியிருப்பிலேயே இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 25). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் எனக் கூறப்படுகிறது,
இந்நிலையில் பீமா நகர் மாசிங் பேட்டை பகுதியில் அந்த இளைஞர் நின்றிருந்தபோது அவரைக் கொலை செய்ய ஒரு கும்பல் விரட்டியிருக்கிறது. அப்போது அந்த இளைஞர் உயிர் தப்பிக்க அருகே உள்ள புதிய காவலர் குடியிருப்பின் உள்ளே நுழைந்து உள்ளார். அப்போதும் அவரை விரட்டிச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல், அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாலக்கரை போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ள நிலையில், திருச்சி மாநகரில் காவலர் குடியிருப்புக்கு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.