அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ENS
தமிழ்நாடு

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல்: இபிஎஸ் விமர்சனம்!

ராஜபாளையம் அருகே கோயில் காவலர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது பற்றி இபிஎஸ் விமர்சனம்..

இணையதளச் செய்திப் பிரிவு

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜபாளையம் அருகே கோயில் காவலர்கள் இருவர் கொலை செய்யப்பட்டு கோயில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,

"விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு முதல்வரே முழு பொறுப்பு.

ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் முதல்வர் தலைமையிலான தோல்வி மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ADMK General secretary Edappadi palanisamy criticise dmk govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் ஒருநாள்: சதம் விளாசிய சல்மான் அகா; இலங்கைக்கு 300 ரன்கள் இலக்கு!

பிசி ஜுவல்லர் 2-வது காலாண்டு லாபம் 17% உயர்வு!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெருவெற்றி? பிகார் வாக்குப்பதிவு கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தாத ஆர்ச்சர்..! ஆஷஸ் தொடரில் நிறைவேற்றுவாரா?

தில்லி கார் வெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ நிலையம் நாளையும் செயல்படாது!

SCROLL FOR NEXT