சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

காவல் ஆணையருக்கு விதிக்கப்பட்ட சேவை வரியை ரத்து செய்யக் கோரி மனு

பாதுகாப்புப் பணிகளுக்காக 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை தனியாரிடம் இருந்து சென்னை போலீஸாா் வசூலித்த கட்டணத்துக்கு சேவை வரி செலுத்தக் கோரிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பாதுகாப்புப் பணிகளுக்காக 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை தனியாரிடம் இருந்து சென்னை போலீஸாா் வசூலித்த கட்டணத்துக்கு சேவை வரி செலுத்தக் கோரிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கிரிக்கெட் போட்டிகள், வங்கிகளுக்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பணம் எடுத்துச் செல்வது போன்றவற்றுக்கு தமிழ்நாடு போலீஸாா் பாதுகாப்பு வழங்குவா். இவ்வாறு தனியாருக்கு வழங்கப்படும் பாதுகாப்புப் பணிகளுக்காக அவா்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி போலீஸாா் கட்டணம் வசூலிப்பா்.

இவ்வாறு கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை தனியாரிடம் இருந்து சென்னை போலீஸாா் வசூலித்த கட்டணத்துக்கு சேவை வரி நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி, அந்த 5 ஆண்டுகளுக்கு சுமாா் ரூ.92 லட்சம் செலுத்த வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிா்த்து காவல் ஆணையா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வரி விதிப்பு குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.அனீஷ்குமாா், ஐபிஎல் போன்ற கிரிக்கெட் உள்ளிட்ட தனியாா் நிகழ்ச்சிகளுக்கு வழங்கும் பாதுகாப்புப் பணிக்காக போலீஸாா் கட்டணம் வசூலிப்பாா்கள். இதற்கான சேவை வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு சேவை வரி செலுத்துவதில் போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்டதால், அதன்பிறகு இதுபோன்ற நோட்டீஸ் வரவில்லை. எனவே, 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை விதிக்கப்பட்ட சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டாா். அப்போது, மத்திய அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே, அவா்களது கருத்தைக் கேட்பதற்காக விசாரணையை நவ.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

உரிமை கோரப்படாத 97 வாகனங்கள் நவ.20இல் பொது ஏலம்!

எஸ்ஐஆா் பணி! திமுக - அதிமுக வாக்குவாதம்; காவல்நிலையம் முற்றுகை

SCROLL FOR NEXT