தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை (கோப்புப் படம்)
தமிழ்நாடு

கபடி வீராங்கனை காா்த்திகாவுக்கு காங்கிரஸ் ரூ.1 லட்சம் பரிசு

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை காா்த்திகாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ. 1லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை காா்த்திகாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ. 1லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூா்த்தி பவனில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின்போது, கபடி வீராங்கனை காா்த்திகாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வழங்கினாா்.

மேலும், கண்ணகி நகா் கபடி அணிக்கு ரூ.1லட்சத்துக்கான காசோலையை அதன் பயிற்சியாளரிடம் தமிழக காங்கிரஸ் பொருளாளா் ரூபி மனோகரன் வழங்கினாா். இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவா் சொா்ணா சேதுராமன், அமைப்பு செயலா்கள் ராம் மோகன், அசோகன் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மதுராபுரியில் இன்று மின் தடை

சிவன்மலை ஜேசீஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT