முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய பத்திரிகை நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய பத்திரிகை நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பத்திரிகை கவுன்சில் (பிசிஐ) நிறுவப்பட்ட நவம்பா் 16-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”எந்த ஒரு மக்களாட்சியிலும், தன்னாட்சி அமைப்புகள் அதிகாரத்தில் உள்ளவர்களால் கைப்பற்றப்பட்டாலும், ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும்.

மத்திய பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிவுடன் அவர்களது தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் தேசிய பத்திரிகையாளர் நாளில் பாராட்டுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Chief Minister Stalin congratulates on National Press Day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த மாதிரியான ஆடுகளத்தைதான் நாங்கள் கேட்டோம்; தோல்விக்குப் பிறகு கௌதம் கம்பீர் பேச்சு!

சேலை + டார்க் சாக்லேட் காதல்... ரேஷ்மா பசுபுலேட்டி!

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

பிக் பாஸ் 9: திவாகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விஜய் சேதுபதி!

நாங்கள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருக்க வேண்டும்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT