திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. மண்டல பூஜைக்காக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதியன்று மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
இந்நிலையில் கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாலை அணிந்திட குவிந்தனர். அதிகாலை முதலே கடலில் புனித நீராடிய பக்தர்கள் திருக்கோயில் உள்ளேயும், வெளியில் சண்முக விலாசம் மண்டபம் முன்பும் தங்கள் குருசாமியின் கைகளினால் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
ஏராளமான பக்தர்களுக்கு திருச்செந்தூர் மணிகண்டன் பாதயாத்திரை குழுவின் குருசாமி அமெரிக்கா சீனிவாச சர்மா, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கௌரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி குருசாமி, பன்னீர்செல்வம் குருசாமி மற்றும் அர்ச்சகர்கள் மாலை அணிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.