தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2025ஆம் ஆண்டில் இதுவரை நாய்க்கடியால் 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோயால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் 4.8 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 48ஆக இருந்தது.
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டில் 3.19 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 3.64 லட்சமாக இருந்தது. இவர்களில் 28 பேர் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் 4.41 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 18 பேர் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.