ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இன்று காலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.
மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே சாலைகளில் ஊர்ந்து சென்றனர். கடும் பனிமூட்டம் காரணமாகக் கட்டட தொழில் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வேலைகள் முடங்கியது.
மேலும், கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அறையிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டத்தால் ஏற்காடு வெள்ளை கம்பளம் போர்த்தியதுபோல் காட்சி அளிப்பது சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.