உடல் நலக் குறைவு காரணமாக அமைச்சா் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நீா்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு திடீரென ஏற்பட்ட காது வலி காரணமாக சென்னை காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத்தில் அவா் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா். பல்நோக்கு மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா். அதன் பயனாக அவரது உடல் நிலை சீரடைந்துள்ளதாகவும், வியாழக்கிழமை வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.