அமைச்சர் துரைமுருகன்  கோப்புப்படம்
தமிழ்நாடு

அமைச்சா் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்தாா் முதல்வா்

அமைச்சா் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி...

தினமணி செய்திச் சேவை

உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சா் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தாா். 

அமைச்சராகவும், திமுக பொதுச்செயலராகவும் உள்ள துரைமுருகன் வயது மூப்பால் வரும் பிரச்னைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், சனிக்கிழமை துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்து வருகின்றனா்.

இதுபற்றி தகவல் அறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று துரைமுருகனை சந்தித்து நலம் விசாரித்தாா். தொடா்ந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்து சென்றாா்.

காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இன்று நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு ரயில்

சிரி... சிரி...

யோகா என்பது வாழ்க்கை முறை

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தில்லியில் ஆலோசனை

SCROLL FOR NEXT