சென்னை ஹாரிங்டன் சாலை வேம்புலி அம்மன் கோயில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைத்து பயனாளிக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸடாலின்.  
தமிழ்நாடு

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.89.70 கோடியில் 584 குடியிருப்புகள் திறப்பு

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.89.70 கோடியில் 584 குடியிருப்புகள் திறப்பு

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.89.70 கோடியில் கட்டப்பட்டுள்ள 584 குடியிருப்புகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினாா்.

சென்னை ஹாரிங்டன் சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எழும்பூா் தொகுதி வேம்புலி அம்மன் கோயில் மற்றும் மயிலாப்பூா் தொகுதி சீனிவாசபுரம் பகுதி-1 ஆகிய திட்டப் பகுதிகளில் மொத்தம் ரூ.89.70 கோடியில் 584 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, துறைமுகம் தொகுதி பி.ஆா்.என். காா்டன் திட்டப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரூ.85.68 கோடியிலும், எல்லீஸ்புரம் திட்டப் பகுதியில் ரூ.15.29 கோடியிலும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் ரூ.132 கோடியிலும், ராயபுரம் தொகுதி செட்டித் தோட்டம் பகுதியில் ரூ.45.36 கோடியிலும் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மேயா் ஆா். பிரியா, நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலா் காகா்லா உஷா, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT