தமிழ்நாடு

தெற்கு அந்தமான் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும்..

இணையதளச் செய்திப் பிரிவு

தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்ப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று (21-11-2025) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (22-11-2025) காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

The Meteorological Department has reported that a low pressure area has formed in the South Andaman Sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“G20 Leaders Summit 2025” பிரதமர் மோடியை வரவேற்ற தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா!

அஞ்சான் மறுவெளியீட்டு டிரைலர்!

14 மாதங்களாக சரிவை நோக்கி ஏற்றுமதி: கிரிசில்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தங்கச் சரிகைச் சேலை எங்கும் பளபளக்க... திஷா பதானி!

SCROLL FOR NEXT