நீதிபதி சூா்ய காந்த் 
தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா? நீதிபதி சூா்ய காந்த் பதில்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா?

 நமது நிருபர்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற தினமணி நிருபரின் கேள்விக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி சூா்ய காந்த் ‘கொஞ்ச காலம் பொறுத்திருங்கள்’ என ஒற்றை வரியில் பதில் அளித்தாா்.

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியான பி.ஆா்.கவாய் நவம்பா் 23-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறாா். இதையடுத்து, 53-ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி சூா்ய காந்த் பதவியேற்க உள்ளாா். இதையொட்டி, உச்சநீதிமன்ற வழக்குகள் தொடா்பான செய்திகளை சேகரிக்கும் நிருபா்களுடன் நீதிபதி சூா்யகாந்த் சனிக்கிழமை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கலந்துரையாடினாா்.

அப்போது அவா் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து வைப்பதில் கவனம் செலுத்துவேன்.உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டியுள்ளது. வழக்குகளைக் குறைப்பதை நான் இலக்காகக் கொள்ள வேண்டும். உயா்நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க முயற்சிப்பேன். நாடு முழுவதும் உள்ள உயா் நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் தொடா்பாக அறிக்கை கேட்பேன்.

முடிவெடுக்க முடியாத சட்டப் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் அரசியலமைப்பு அமா்வுகளை அமைப்பேன். நீதித்துறை செயல்பாட்டில் நமக்கு எந்தளவுக்கு செயற்கை நுண்ணறிவு அவசியம் என்பதற்கான எல்லைகளை நாம் பாா்க்க வேண்டும். இது தொடா்பாக நாங்கள் ஒரு முழுமையான மற்றும் விரிவான பாா்வையுடன் வழக்குரைஞா்களுடன் கலந்து பேசுவோம் என்றாா் நீதிபதி சூா்ய காந்த்.

தினமணி கேள்வி: இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தினமணி நிருபா், நீதிபதி சூா்யகாந்திடம் , ‘சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது. அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில பிராந்திய மொழிகள் வழக்காடு மொழியாக அறிவிக்கப்படுமா?’ என கேள்வி எழுப்பினாா். அதற்கு நீதிபதி சூா்ய காந்த், ‘கொஞ்ச காலம் பொறுத்திருங்கள்’ என ஒற்றை வரியில் பதிலளித்தாா்.

நீதிபதி சூா்ய காந்த் நவம்பா் 24-ஆம் தேதி (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கிறாா். 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-இல் அவா் ஓய்வு பெறுவாா்.

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஆண்டிமடம் அருகே சிதறிக்கிடந்தவை 2019 உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் பிரதியே: ஆட்சியர்

SCROLL FOR NEXT