மதுரையில் சர்வதேச ஹாக்கி திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
உலகக் கோப்பை 14-வது ஜூனியர் ஹாக்கி போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் வரும் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளை நடத்துவதற்காக மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டுத் திடல் 20 கோடி ரூபாய் செலவில் சர்வதேச அளவிலான பிரம்மாண்ட ஹாக்கி மைதானமாக மேம்படுத்தப்பட்டது.
இதில் 1,756 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசிப்பதற்கான கேளரிகள் திடலின் இருபுறத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் 24 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் ஹாக்கி அணிகள் விளையாடும் 72 போட்டிகள் நடைபெறுகின்றன.
அதில் மதுரை சர்வதேச ஹாக்கி திடலில் 34 போட்டிகள் நடைபெறும். குறிப்பாக நவம்பர் 3-ஆம் தேதி இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பங்கேற்கும். லீக் போட்டியும் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் மதுரை சர்வதேச ஹாக்கி திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.