பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், துணிவு வழிநடத்தும்போது வரலாறு உருவாகிறது! முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற சிறப்பான நமது மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
நீங்கள் இந்தியாவின் பெருமையாகவும், உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
115 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. 12.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது.
இந்தியாவின் பியூலா சரண் அதிகபட்சமாக 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.