தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 26ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு சென்யார் என்று பெயர் சூட்டப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்யார் என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் அளித்துள்ளது. இதற்கு சிங்கம் என்று அர்த்தமாம்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது ஓரிரு நாள்களில் புயலாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த புயல் சின்னம், புயலாக உருவானால், ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரை செய்த சென்யார் என்ற பெயர் சூட்டப்படவிருக்கிறது.
இந்த புயல் சின்னம், கணிக்க முடியாத வகையில் இருப்பதாகவும், வரும் வாரத்தில்தான் இதன் நிலை குறித்து அறிய முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த புயல் சின்னம் தமிழ்நாடு, ஆந்திரம் வழியாக கரையைக் கடக்கலாம் அல்லது மேற்கு வங்கம் - வங்கதேசம் வழியாக கரையைக் கடக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் அதன் பாதையை முன்கணிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அந்தமான் - நிகோபார் தீவுப் பகுதிகளில் நவ. 22 முதல் 27ஆம் தேதி வரை காற்றின் வேகம் மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் சின்னம் மேலும் வலுவடையும்போது காற்றின் வேகமும் அதிகரிக்கும்.
இந்த புயல் சின்னத்தால், எங்கெல்லாம் மழை பெய்யக் கூடும், எங்கு கரையைக் கடக்கும் என்பது இன்னமும் கணிக்க முடியாததாகவே உள்ளது.
இது தாழ்வு மண்டலமாக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகுதான், இதன் பாதையை கணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.