சென்னை கோயம்பேட்டில் உள்ள கவிஞா் ஈரோடு தமிழன்பனின் இல்லத்தில் அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின்.  
தமிழ்நாடு

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவு

இணையதளச் செய்திப் பிரிவு

மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் தமிழ் மொழித் தொண்டை பாராட்டும் வகையில் அவரின் உடலுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இறுதிக்காலம் வரையிலும் பல வகைகளில் தமிழுக்குத் தொண்டாற்றியவர் ஈரோடு தமிழன்பன் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

புகழ்பெற்ற கவிஞரான ஈரோடு தமிழன்பன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று (நவ. 23) பிரிந்தது.

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ஆசிரியரான சாந்தகுமாரி என்ற மனைவியும், மருத்துவர் பாப்லோ நெருடா, மருத்துவர் பாரதிதாசன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) காலை 10:30 மணி அளவில் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

இதையும் படிக்க | காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறாா் விஜய்!

Police pay tribute to Erode Tamilanbans body Chief Minister mk stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் மக்கள் சந்திப்பு: குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு அனுமதி இல்லை?

இத்தாலியின் ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற அஜித் குமார்!

தேஜஸ் விபத்து: சூலூர் விமானப் படை தளத்தில் விங் கமாண்டர் உடலுக்கு அரசு மரியாதை!

தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! மற்ற மாவட்டங்களில்..?

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

SCROLL FOR NEXT