காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் கொடி இடம்பெறவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொண்டு தொண்டர்கள் முன்பு உரையாற்றினார்.
உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டு பின்னர் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கட்சி தொண்டா்கள், பொதுமக்கள் என அரங்கத்தில் 2,000 போ் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த அரங்கத்தில் எங்கும் தவெக கொடி இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.
இதையும் படிக்க | கூத்தாடி கட்சியா? திமுகவுக்காக எம்ஜிஆர் வசனம் பேசிய விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.