நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை எதிரொலியாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8.5அடி உயர்ந்து 129.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,309 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும் பாதுகாப்பு கருதியும் அணையில் இருந்து வினாடிக்கு 2800 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணை பகுதியில் 7.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஆறடி உயர்ந்து 103.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4302 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 440 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை பகுதியில் 6.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சிறிய அணையான சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 19 அடி உயர்ந்து 149.24 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 7.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
பாபநாசம்
உச்ச நீர்மட்டம் : 143 அடி
தற்போதைய நீமட்டம்: 129.55 அடி
நீர் இருப்பு: 4684.45 மி.கன அடி
நீர்வரத்து : 7308.76 கன அடி
வெளியேற்றம் : 2800 கன அடி
மழை : 7.6 செ.மீ
மணிமுத்தாறு
உச்ச நீர்மட்டம் : 118 அடி
தற்போதைய நீர்மட்டம் : 103.05 அடி
நீர் இருப்பு : 4063.70 மி.கன அடி
நீர்வரத்து : 4301.07 கன அடி
வெளியேற்றம் : 440 கன அடி
மழை : 6.6. செ.மீ
சேர்வலாறு
உச்ச நீர்மட்டம் : 156 அடி
தற்போதைய நீர்மட்டம் : 149.24 அடி
நீர் இருப்பு : 1080.97 மி.கன அடி
மழை : 7.2செ.மீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.