டிசம்பர் 15ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடந்த தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகமாக மாறியுள்ளது.
வரும் டிசம்பர் 15ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை முக்கிய முடிவு எடுக்கப்படும்.
டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால், திருத்தப்படுவீர்கள். எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்.
3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். தொடர் தோல்விகளால், நாம் கண்ணீர்விட்டு அழும்நிலையில் அதிமுக உள்ளது.
சில சர்வாதிகாரிகளால் நம்முடைய இயக்கம் கடந்த 11 தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு இனி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே பேசிய வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய கட்சி உருவாக்கப்படுமென தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.