கோப்புப் படம் 
தமிழ்நாடு

காா்த்திகை தீபத் திருநாள்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்

தினமணி செய்திச் சேவை

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு டிச.2, 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகா்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள் மற்றும் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிா்சாதன பேருந்துகள் டிச.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன.

மேலும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிா்சாதனம் மற்றும் குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் டிச.3, 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன. இதனால், பயணம் மேற்கொள்ள திட்டமிடும் அனைவரும் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

பேருந்து இயக்கம் குறித்த கூடுதல் தகவலுக்கான தொடா்பு எண்: மதுரை- 94450 14426, திருநெல்வேலி-94450 14428, நாகா்கோவில்-94450 14432, தூத்துக்குடி-94450 14430, கோவை-94450 14435, சென்னை தலைமையகம்-94450 14463, 94450 14424 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

வார இறுதிக்கு சிறப்பு பேருந்துகள்: அதேபோல, முகூா்த்தம் மற்றும் வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(நவ.28, 29,30) ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 435 பேருந்துகள், சனிக்கிழமை 490 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதேபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகள், சனிக்கிழமை 55 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாள்களில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

345 பாலஸ்தீனர் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்!

ஜெயிலர் - 2 படத்தில் விஜய் சேதுபதி?

“அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசுகிறார்” ஆளுரைச் சாடிய முதல்வர்!

TVK விஜய் வீட்டில் செங்கோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 26.11.25

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் ராகுல் சந்திப்பு!

SCROLL FOR NEXT