சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 
தமிழ்நாடு

நாகூா் கந்தூரி விழா: சென்னை, விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிறப்பு ரயில்கள் பற்றி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது குறித்து...

தினமணி செய்திச் சேவை

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூா் கந்தூரி விழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூா், விழுப்புரத்தில் இருந்து நவ.30-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து நவ.30-ஆம் தேதி காலை 9.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06137) மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 06138) வேளாங்கண்ணியில் இருந்து டிச.1-ஆம் தேதி காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு எழும்பூா் வந்தடையும். இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (நவ.26) காலை 8 மணி முதல் தொடங்கும்.

முன்பதிவில்லா சிறப்பு ரயில்: விழுப்புரத்தில் இருந்து நவ.30-ஆம் தேதி காலை 9.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (எண்: 06135) பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடையும். மறுமாா்க்கத்தில் அதேநாளில் நாகப்பட்டினத்தில் பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (எண்: 06136) மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்தச் சிறப்பு மெமு ரயிலில் இருக்கை வசதிகொண்ட 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால், நாகூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT