ENS
தமிழ்நாடு

நவ. 29ல் சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

நவ. 29ல் வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை...

இணையதளச் செய்திப் பிரிவு

வருகிற நவ. 29 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் நவ. 22 நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவ. 23 காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில் இன்று(நவ. 25) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆனால் இது புயலாக மாறாது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ. 29 ஆம் தேதி(சனிக்கிழமை) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவ. 30 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நவ. 23 குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, குமரிக் கடல், அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகியுள்ளது.

Orange alert for 11 TN districts on nov 29

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெறி ரீ-ரிலீஸ்!

ரஷிய அதிபர் புதின் கைது செய்யப்படுவாரா? டிரம்ப் பதில்!

பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

பிரிட்டனில் அன்கட் வெர்ஷனாக வெளியாகிய பராசக்தி!

இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருக்கும் அவெஞ்சர்ஸ்!

SCROLL FOR NEXT