பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
”ஆளுநர் ஆர்.என். ரவி நேற்றைய நாள் தொலைக்காட்சி பேட்டியில் பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை தனது பாணியில் பேசியிருக்கிறார், பாஜகவின் ஊது குழலாக அவர் முழங்கி இருக்கிறார், திராவிடம் என்பது ஒரு கற்பனை, தமிழ்நாட்டில் பிகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று கூறுகிறார்,
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், பிகாரிகள் நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம், குடும்பம் நடத்துவதற்கான சூழல் இங்கு இருக்கிறது என பிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்கு என்று அனுப்பப்பட்டவர் ஆளுநர், கமலாலயத்திற்கு அனுப்பப்பட வேண்டியவர் ஆளுநர் மளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பல மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் எந்த குரலும் எழுப்பவில்லை, எந்தக் கூச்சலும் போடவில்லை. நாங்கள் தமிழ்நாட்டில் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் எங்களோடு இருக்கிறது, தமிழர்கள் எங்களோடு இருக்கிறார்கள். நாங்கள் சகோதரர்களாக இருக்கிறோம் என மற்ற மொழி பேசுபவர்கள் கூறுகிறார்கள்.
உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு குட்டுதான் வைத்துள்ளது, என்றுமே அவரைப் பாராட்டியது கிடையாது. ராஜ்பவனுக்கு ஆட்சி அதிகாரம் கிடையாது, மாநில அரசுதான் ஆள வேண்டும், எதனையும் நிறுத்தி வைக்கக்கூடிய உரிமை அவருக்கு கிடையாது, ஒன்று பரிசீலனை செய்யலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.
இதன்பிறகு, அவர் வேறு எதையாவது நிறுத்தி வைத்தால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி தீர்ப்பை பெறுவோம், இந்த உரிமை எங்களுக்கு தற்போது கிடைத்திருக்கிறது” என்றார்.
இதையும் படிக்க: ஒரே நேரத்தில் தமிழகத்தை மிரட்டும் 2 புயல் சின்னங்கள்? சென்னைக்கு மழை வருமா? விரிவான பார்வை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.