தமிழ்நாடு

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

இன்று பிற்பகல் சென்யார் புயல் இன்று உருவாகவிருப்பது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று(நவ. 26) சென்யார் புயலாக உருவாகிறது.

மலாக்கா ஜலசந்தி பகுதிகளின் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக செவ்வாய்க்கிழமை (நவ.25) வலுப்பெற்றது.

இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலில் சென்யார் புயலாக உருவாகிறது.

இதேபோல, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை(நவ.25) காலை குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் நிலவுகிறது.

தொடர்ந்து இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, இன்று (நவ.26) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

Cyclone Senyar is expected to form this afternoon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

SCROLL FOR NEXT