தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி, முதல்வரும் தந்தையுமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றார்.
முன்னதாக, தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களுக்கு இன்று காலை நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், திமுக எம்பி தயாநிதி மாறன், அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் தந்தையுமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.