முகப்பு
தமிழ்நாடு

விஜய் பேச்சு குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்

தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Updated On : 14 பிப்ரவரி 2026, 7:48 pm IST
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழக அரசு ரூ. 5,000 மகளிர் உரிமைத்தொகை கொடுத்தது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதிலில், தமிழக முதல்வருக்கும் எங்கள் அண்ணனுக்கும் நன்றி சொல்லுங்கள் என நான் மதுரை வந்தபோது அதிகமான பெண்கள் என்னிடம் கூறினார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடனே 4 ஆயிரம் கொடுத்தோம்.

பிறகு கரோனா நிவாரணம் நிதியும் முதல்வர் கொடுத்தார். அதை மக்களிடமே கேளுங்கள் அவர்களே கருத்து சொல்வார்கள். உரிமைத்தொகை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது வழக்கம்தான். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று இப்போது தலைவர் சொல்லியிருக்கிறார்.

Advertisement

Advertisement

யார் என்ன சொன்னாலும் நமது முதல்வர் சொன்னபடி செய்து வருகிறார். விஜய் கூட்டங்களில் உயிரிழப்பு நடப்பது குறித்த கேள்விக்கு? இதையார்கிட்ட கேட்கனும், என்னிடமா கேட்கனும். உண்மையாக இதுக்கு யார் பொறுப்பேற்று யார் பதில் சொல்லனும். விஜய்யை வந்ததற்கு பின்புதான் திட்டங்கள் உள்ளது என கூறுவது குறித்த கேள்விக்கு? அண்ணாவே இவர (விஜய்) பார்த்து தான் திமுகவையே ஆரம்பித்தார் என்று கூட சொல்வார் என்று கூறினார்.

summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin has responded to a question about TVK leader Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.