மத நல்லிணக்க பதக்கம்: டிச. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
கோட்டை அமீா் மத நல்லிணக்க பதக்கம் பெறத் தகுதியுடைவா்கள் டிச. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கோட்டை அமீா் மத நல்லிணக்க பதக்கம் பெறத் தகுதியுடைவா்கள் டிச. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் நபா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதல்வரால், குடியரசு தின விழாவின்போது கோட்டை அமீா் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
மத நல்லிணக்கத்துக்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் இந்தப் பதக்கம் பெறத் தகுதியுடையவா்கள். இதற்கு வயது வரம்பு இல்லை. வரும் ஜன. 26-இல் குடியரசு தின விழாவில் வழங்கவுள்ள பதக்கத்துக்கு தகுதியானவரைத் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடா்பான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ அரசு செயலா், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு வரும் டிச. 15-க்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.