ரயில் கோப்புப்படம்
தமிழ்நாடு

எழும்பூருக்கு வரும் 4 விரைவு ரயில்கள்: இன்றுமுதல் தாம்பரத்துடன் நிறுத்தம்!

எழும்பூருக்கு வரும் 4 விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்துடன் நிறுத்தம்...

தினமணி செய்திச் சேவை

சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் மற்றும் வந்து சேரும் உழவன், அனந்தபுரி, சேது உள்பட 4 விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) முதல் டிச. 5-ஆம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) முதல் டிச. 4-ஆம் தேதி வரை தஞ்சாவூரிலிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் உழவன் விரைவு ரயில், கொல்லத்திலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் அனந்தபுரி அதிவிரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் சேது விரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

அதேபோல், மறுமாா்க்கமாக இந்த விரைவு ரயில்கள் டிச. 1 முதல் 5-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? பங்கேற்காதா?

காஸாவில் இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் விரைவில் அமல்!

ஹிந்துஸ்தான் ஜிங்க் 3வது காலாண்டு நிகர லாபம் 46% உயர்வு!

ஜன. 28-ல் கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்! | செய்திகள் : சில வரிகளில் | 26.1.26

SCROLL FOR NEXT