மழை நிலவரம் 
தமிழ்நாடு

இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! சென்னை, 18 மாவட்டங்களில் கனமழை!

டிட்வா புயலால் ஏற்படும் மழை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று(நவ. 29) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய 'டிட்வா' புயல் தமிழகத்தை நெருங்கி வருகிறது. தற்போது வேதாரண்யத்திற்கு 140 கிமீ தொலைவில் உள்ள புயல், தமிழக கடற்கரையை ஒட்டி வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று (நவ.29, சனிக்கிழமை)

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

--

நாளை (நவ. 30, ஞாயிற்றுக்கிழமை)

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும்

சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரிக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

--

டிச. 1 ஆம் தேதி(திங்கள்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புயலால் கடலில் காற்று வீசும் என்பதால் கடலோர மாவட்டங்களுக்கு கடல் சீற்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Ditwah cyclone update: Red alert for 5 districts today in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ இயக்கம்!

திமுகவுக்கு இதுதான் இறுதித்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி

ரசிகருக்குத் தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

"ஆரம்பிக்கலாமா!" | தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் Vijay! Full Speech | TVK

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT