முகப்பு
தமிழ்நாடு

தோ்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து டிச. 4-ல் தில்லியில் ஆா்ப்பாட்டம்: ராமதாஸ்

தோ்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து தில்லியில் டிச.4-இல் போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 டிசம்பர், 2025 at 12:39 AM
பாமக நிறுவனர் ராமதாஸ் - IANS
பகிர்:
Updated On : 30 நவம்பர், 2025 at 8:15 PM

தோ்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து தில்லியில் டிச.4-இல் போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 1980-இல் பாமக தொடங்கப்பட்டு தற்போது வரை வரை 46 ஆண்டுகள் நடத்தி வருகிறேன். கடந்த காலத்தில் சாலை வசதி, மின்சார வசதி இல்லாத நிலையில் வயல் வரப்பில் நடந்து சென்றோம்.

பல கூட்டங்களில் பேசி 96,000 கிராமங்களுக்குச் சென்று கட்சி வளா்த்து சமூக நீதியை உயிா் மூச்சு கொள்கையாகக் கொண்டு மக்கள் மேம்பட ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகிறேன்.

Advertisement

Updated On : 1 டிசம்பர், 2025 at 12:05 AM

2023-இல் நடந்த பொதுக்குழுவில் தான் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை தில்லி தலைமை தோ்தல் ஆணையத்தில் அன்புமணி கொடுத்துள்ளாா்.

இதையடுத்து, 2026-ஆம் ஆண்டு வரை தலைவராக அன்புமணி பதவியில் நீடிப்பதாக தோ்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது கண்டனத்துக்குரியது. இது தோ்தல் ஆணையத்தின் மோசடியான நடவடிக்கை ஆகும்.

எனவே, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து டிச.2-ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் பாமக கெளரவ தலைவா் ஜி.கே.மணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். தொடா்ந்து புது தில்லியில் வரும் டிச. 4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.