ஆளில்லா கடை Center-Center-Delhi
தமிழ்நாடு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு! எங்கே? எப்படி?

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாபநாசத்தில் ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேர்மை விழிப்புணர்வு நாளைக் கொண்டாடும் வகையில், 26வது ஆண்டாக பாபநாசத்தில் இன்று ஒரு நாள் ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேர்மை விழிப்புணர்வு நாளை போற்றும் வகையில், பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் 26-ஆம் ஆண்டாக, கடையில் பொருள்கள் விற்பனை செய்வதற்கு, விற்பனையாளர்கள் யாரும் இல்லாமல் ஆளில்லா கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது.

மகாத்மா காந்தியின் நேர்மையைப் போற்றும் வகையில் உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த சுதந்திர இந்தியாவை உருவாக்க காந்தி கண்ட கனவை நினைவாக்கும் விதமாக அவர் பிறந்தநாளை நேர்மை விழிப்புணர்வு நாளாக உருவாக்கி விற்பனையாளர்கள் இல்லாத (ஆளில்லாத) கடையை வருடம் ஒருமுறை என, தொடர்ந்து 26-ஆண்டுகளாக பாபநாசம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.

இந்த கடையை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான சாக்கோட்டை அன்பழகன் திறந்து வைத்தார்.

இந்த ஆள் இல்லாத கடையில் வைக்கப்பட்டிருந்த பொருள்களில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்ட பொதுமக்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட பொருள்களுக்கு உண்டான பணத்தை கடையில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போட்டுச் சென்றனர்.

மேலும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருள்கள், புத்தகங்கள் போன்ற ஏராளமான பொருள்கள் விற்பனை செய்வதற்கு ஆளில்லாத கடையில் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

To celebrate Honesty Awareness Day, an unmanned shop has been opened in Papanasam for the 26th year today, on the occasion of Gandhi Jayanti.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!

இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!

SCROLL FOR NEXT