மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து டிஜிபி அனுலவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அம்மன் சுவாமி சன்னதிகள், தங்க கொடிமரம், அன்னதானம் வழங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
3 மணிநேர சோதனையில் எந்த வெடி பொருள்களும் கண்டறியப்படாத நிலையில் இ-மெயில் புரளி என தெரியவந்தது. இதேபோல் திருப்பரங்குன்றம் கோயில், சிக்கந்தர் தர்காவுக்கும் மர்ம நபர்களிடமிருந்து மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி, மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸார் மோப்ப நாய் உதவியோடு தீவிர சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.