தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், அரசியல் கட்சிகளின் சாலை வல நிகழ்ச்சிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக மீது கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்தது.
மேலும், நாமக்கல்லில் இருந்து கரூர் சென்ற விஜய்யின் பிரசார வாகனம், கரூர் தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய விஜய்யின் பிரசார வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, அதனைப் பறிமுதல் செய்ய வேண்டாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிமன்ற அறிவுறுத்தலையடுத்து, விஜய்யின் பிரசார வாகனம் மற்றும் அதன் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஎன்எஸ் 281 பிரிவில், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அல்லது மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் அவசரமாக வாகனம் ஓட்டுவது என விஜய்யின் வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.