கரூர் விவகாரத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்கக் கூடாது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரூர் விவகாரத்தில் நீதியரசர்களை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமான விஷயம்தான். நீதியரசர்கள் பற்றி எப்போதும் நாங்கள் குறை சொல்ல மாட்டோம். தமிழக முதல்வர் மட்டும்தான் மத்திய அரசை எதிரியாக பார்க்கிறார்.
முதல்வர் தொடர்ந்து ஆளுநரை சீண்டி பார்ப்பது சரியல்ல, ஆளுநர் கேட்கும் கேள்வி சரியானதுதான். ஆளும் கட்சி அனைத்தையும் அனுசரித்துப் போக வேண்டும். கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்குப் போட்டால் வழக்கு நிற்காது. இது அல்லு அர்ஜூன் வழக்கு. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால் விஜய்யை ஓரிருநாள் கைது செய்யலாம்.
தவெக, விஜய்க்கு அடைக்கலம் கொடுக்க, பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தவெக மீது ஒருசில தவறுகள் உள்ளதுதான். அதற்காக விஜய்யை குற்றவாளி ஆக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை, நாங்கள் நியாயத்தை நியாயமாக பேசுகிறோம்.
திருமாவளவன் கட்சியில் இருந்து மக்கள் பெருமளவு வெளியேறி மற்ற கட்சிக்கு செல்வதைப் பார்க்கிறார். அந்த கோபத்தில்தான் மத்திய அரசு, விஜய்யை அவர் விமர்சிக்கிறார். ராகுல் மணிப்பூர் போகும்போது பாஜகவினர் கரூர் வரக்கூடாதா?. அஸ்ரா கார்க் நல்ல அதிகாரி. அவர் விசாரணையை நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.