மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலை.  
தமிழ்நாடு

வாடிவாசல் அருகே எம்ஜிஆர் சிலை சேதம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மதுரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியதற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை அவனியாபுரம் வாடிவாசல் அருகே எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியதற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி , வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது.

எம்ஜிஆரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.

மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சீர்செய்து, மீண்டும் நிறுவி, மாலை அணிவித்து அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

AIADMK General Secretary Edappadi Palaniswami has condemned the vandalism of the MGR statue near Vadivasal, Avaniyapuram, Madurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடா முறைகேடு: 40 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

மகளே என் மருமகளே தொடரை இயக்கும் தங்கமகள் இயக்குநர்!

பிகார் தேர்தல்: நவ. 6, 11 - இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு!

கார்த்திக்கு வில்லனான ஆதி?

உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்: ஜெமிமா ரோட்ரிக்ஸ்

SCROLL FOR NEXT