சென்னை: தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பாகக் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கூடுதல் கட்டடங்களை திறந்தும் வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
பழனி, திருப்பத்தூர், கூடலூர், சங்கராபுரம், மேலூர் அரசு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரூ.108.50 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மேலும், தென்காசி, திருப்பத்தூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் ரூ.42 கோடியில் கட்டப்பட்ட மருந்து கிடங்குகளும், மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் ரூ.1.49 கோடியில் கட்டப்பட்ட ஆய்வகக் கட்டமும் திறக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில் உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அலுவலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.
மருத்துவம், ஓமியோபதி ஆணையரகம் சார்பில் ரூ.6.22 கோடியில் கட்டப்பட் கட்டடங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், மருத்துவம், ஓமியோபதி ஆணையரகம் சார்பில், ரூ.20.15 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டிவைத்தார் முதல்வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.