கோப்புப் படம் 
தமிழ்நாடு

கரூர் பலி: நீதிபதி செந்தில்குமார் குறித்த அவதூறு கருத்துக்கு மூவர் கைது!

நீதிபதி செந்தில்குமார் குறித்த அவதூறு கருத்துக்கு மூவர் கைது...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் நீதிபதி செந்தில்குமாரின் உத்தரவைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக அவதூறு கருத்து பரப்பிய மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், சம்பவம் நடந்தவுடன் தொண்டர்களையும் ரசிகர்களையும் கைவிட்டுவிட்டுச் சென்ற விஜய்யையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் நீதிமன்றம் கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

மேலும், விஜய் பயணித்த பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்? விஜய்க்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, நீதிபதி செந்தில்குமாரின் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு அவருக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் விஜய்யின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நீதிபதி செந்தில்குமாருக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், கண்ணன், டேவிட், சசி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Three arrested for defamatory remarks against Judge Senthilkumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

SCROLL FOR NEXT