சென்னை வண்டலூர் பூங்காவில் சஃபாரி பகுதியிலிருந்து மாயமான ‘ஷெரியார்’ என்ற சிங்கம், இரு நாள்களுக்குப் பிறகு இன்று(அக். 6) மீண்டும் கூண்டு திரும்பியுள்ளது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. இதில், 3 ஆண் மற்றும் 4 பெண் என மொத்தம் 7 சிங்கங்கள் ‘லயன் சஃபாரியில்’ பராமரிக்கப்படுகின்றன.
இதனிடையே, கடந்த 2023-ஆம் ஆண்டு பெங்களூரு பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவுடன் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம் ‘ஷெரியார்’ என்ற 5 வயது ஆண் சிங்கம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சிங்கம் சஃபாரி பகுதிக்குள் தொடர்ந்துவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்தச் சிங்கம் கடந்த அக்.3-ஆம் இரவு அதன் தங்குமிடத்துக்கு திரும்பவில்லை.
இதனால், ஷெரியாரை தேடும் பணியில் பூங்கா நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், மீட்புக் குழுக்கள் வனப்பகுதிக்குள் சிங்கம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். மேலும், சஃபாரி பகுத்திக்குள்தான் சிங்கம் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில், இரு நாள்களாக உணவு எடுக்க வராமல், சஃபாரி பகுதியில் மறைவாக இருந்த சிங்கம், இன்று மீண்டும் கூண்டு திரும்பியதாக பூங்கா ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பாடகர் ஸுபீன் கர்க் வழக்கு: சிங்கப்பூர் சென்று விசாரணை நடத்தும் திட்டமில்லை! -அஸ்ஸாம் முதல்வர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.