யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2025-ஐ தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டதுறையின் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன். உடன், துறையின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, வனத் துறை தலைவா் ஸ்ரீ நிவாஸ் ரெட்டி உள்ளிட்டோா். 
தமிழ்நாடு

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

தமிழக வனப் பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக வனப் பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, யானைகள் கணக்கெடுப்பு தொடா்பான அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் ராஜகண்ணப்பன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

பின்னா், அவா் கூறியதாவது: தமிழக வனப் பகுதிகளில் 3,170 யானைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்த 3,063 என்ற எண்ணிக்கையைவிட 107 யானைகள் அதிகம். தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சியானது, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட வனவிலங்கு மேலாண்மை மற்றும் சமூக பங்களிப்பின் வெளிப்பாடாகும்.

வளம் குன்றிய காடுகளை மீட்டெடுப்பதில் இருந்து, யானைகள் வழித்தடங்களை வலுப்படுத்துவது மற்றும் மனித - யானை மோதலைத் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வரை அணுகுமுறை முழுமையானதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் உள்ளது என்றாா்.

நிகழ்வில் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு , முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீநிவாஸ் ஆா்.ரெட்டி உள்ளிட்ட வனத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

நாகையில் அக்.10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT