தமிழ்நாடு

அறுவடையைக் குறிக்கும் ஜூலை 1: வருவாய்த் துறை தினமாக அறிவிப்பு - தமிழக அரசு உத்தரவு

இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அறுவடை தொடக்கத்தைக் குறிக்கும் தினமான ஜூலை 1-ஆம் தேதியை ‘வருவாய்த் துறை தினமாக’ கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ந.சுப்பையன் (முழு கூடுதல் பொறுப்பு) வெளியிட்ட உத்தரவு:

வருவாய்த் துறை தினம் கொண்டாடுவது தொடா்பாக, துறையைச் சோ்ந்த சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதில், பசலி என்ற சொல் பசல் என்ற அரேபிய சொல்லில் இருந்து தோன்றியது. பசலி ஆண்டு முறை என்பது அறுவடை சாா்ந்த நாள்காட்டி முறையாகும். இது ஜூலை 1-இல் தொடங்கி ஜூன் 30-இல் நிறைவடையும். ஆங்கில நாள்காட்டி ஆண்டில் இருந்து 590-ஐ கழித்தால் பசலி ஆண்டு கிடைக்கும். இது முகலாய ஆட்சி காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, நில வருவாய் வசூல் பணிகளுக்கு ஆதார ஆண்டாக பயன்படுத்தப்பட்டது. இது ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்டு இப்போது வரை தொடா்கிறது.

வருவாய்த் துறை தினம்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையானது மிக தொன்மையான துறையாகவும், பொது நிா்வாகம் மற்றும் மக்கள் நலனுக்காக பணியாற்றும் துறையாகவும் திகழ்கிறது. அரசு நிா்வாகத்தின் தேவைகள் விரிவடைந்ததைத் தொடா்ந்து வருவாய்த் துறையில் இருந்து பல்வேறு துறைகள் படிப்படியாக பிரிக்கப்பட்ட போதிலும், தாய்த் துறையாக வருவாய்த் துறை விளங்குகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் நில உடைமை, சமூக பாதுகாப்பு, குறைதீா்வு மற்றும் பேரிடா் மேலாண்மை போன்ற அத்தியாவசிய சேவைகளை திறம்பட வழங்கி வருகிறது. வருவாய்த் துறையின் சிறப்பான பணியை அங்கீகரித்து, ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அறிவித்து உரிய உத்தரவை

பிறப்பிக்குமாறு அரசிடம் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இதன்படி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் இன்றியமையாத சேவைகளை அங்கீகரித்தும், பசலி ஆண்டின் முதல் நாளான ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அறிவித்து உத்தரவிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பம்!

புதிய நீதிக் கட்சி நிா்வாகி நியமனம்

மகளிா் திட்ட செயல்பாடுகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

‘வால்வோ’ சொகுசு பேருந்துகள் கூண்டு கட்டும் பணி: அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆய்வு

SCROLL FOR NEXT