முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 8 அக்டோபர், 2025 at 11:50 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 28 districts, including Chennai, for the next 2 hours (until 7 pm).

முழு கட்டுரையைப் படிக்க →