கடந்த சில நாள்களாக அசுர வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,320 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் தங்கம் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் ரூ. 90,000 -யை எட்டியுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 91,400-க்கு விற்பனையான நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 1,320 குறைந்து ரூ. 90,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ. 11,260-க்கு விற்பனையாகிறது.
கடுமையாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 3 அதிகரித்து ரூ.180-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,80,000-க்கும் விற்பனையாகிறது.
அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு, உலக நாடுகளின் மீது அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, சா்வதேச போா் பதற்றம், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் தங்கம் விலை உயா்ந்த வண்ணம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.