தவெக பொதுச்செயலர் என். ஆனந்த் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என சொல்லப்படுகிறது. என்.ஆனந்த் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
கரூரில் கடந்த 27-ஆம் தேதி தவெக பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து தவெக பொதுச் செயலா் ஆனந்த், துணைப் பொதுச் செயலா் நிா்மல்குமாா் உள்ளிட்டோா் மீது கரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஏற்கெனவே இவ்வழக்கில் மாவட்டச் செயலர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, ஆனந்த், நிா்மல்குமாா் ஆகியோா் முன்ஜாமின் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் தனித் தனியே மனு தாக்கல் செய்தனா். ஆனால் அவர்களின் முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.