தங்கம் விலை.  
தமிழ்நாடு

தங்கம் விலை ரூ. 92,000! மாலையில் மேலும் ரூ. 600 உயர்ந்தது! வெள்ளி விலையும்...

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்த நிலையில் மாலை மேலும் ரூ. 600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 92,000 ஆக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் தங்கம் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் ரூ. 90,000 -யை எட்டியது.

நேற்று தங்கத்தின் விலை சற்றே குறைந்திருந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை அதிரடியாக உயர்ந்தது.

காலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.85 உயர்ந்து, ரூ.11,425க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனையாகி வந்தது.

தொடர்ந்து மாலையில் ஒரு சவரன் ரூ. 600 உயர்ந்து ரூ. 92,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 11,500 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை 3 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் ரூ. 3 உயர்ந்து தற்போது ஒரு கிராம் ரூ.190-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1.90 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold silver price increased 2nd time today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னித்தீவு... ஆன் ஷீத்தல்!

இன்ப அதிர்ச்சி... ஐஸ்வர்யா!

பிகாரில் மூன்றாவது அணியை அமைக்க ஓவைசி மும்முரம்: பிற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை!

கருப்பு, வெள்ளை... அஸ்லி மோனலிசா

நினைவுகள்... சுதா

SCROLL FOR NEXT