கோப்புப் படம்  
தமிழ்நாடு

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 809 தோ்வு மையங்களில் இன்று (அக்.12) தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணிகள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி இந்தத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

இத்தேர்வில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சாா்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 போ் இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை என கூறி, தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தேர்வை ஒத்தி வைக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட முடியாது என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முதுநிலை ஆசிரியர் தோ்வு நடைபெறுகிறது.

The post-graduate teacher examination has begun and is underway.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT